lan sinlan eng

அவுஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான மூன்று இருபதுக்கு-20 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் சர்வதேசப்போட்டித் தொடரில் சிறப்பாக துடுப்பாடிய அஜிங்கியா ரஹானே இந்த அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இலங்கை தொடரின் 15 பேரடங்கிய குழுவில் இவர் இடம்பிடித்திருந்த போதும், போட்டியில் பங்குபற்றவில்லை. தினேஷ் கார்த்திக் மீண்டும் அணியில் இடத்தை தக்கவைத்துள்ளார். மேற்கிந்தியா தீவுகளுடனான தொடரில் இவர் சிறப்பாக துடுப்பாடிய போதும், இலங்கை தொடரின் குழுவில் இடம் பிடிக்கவில்லை. ஆஷஸ் நெஹ்ரா மீண்டும் அணியில்இடம்பிடித்துளார்.

இந்தியா அணியின் இருபதுக்கு-20 அணியில் நிரந்தர இடம்பிடித்து வந்த இவர், மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை தொடர்களில் இடம்பெறவில்லை. இவரை மாத்திரம் சிறப்பு 20-20 வீரராக ஒரு போட்டிக்கு அனுப்ப தேவையில்லை என இந்திய தெரிவுக்குழு தவிர்த்திருக்கலாம். எனினும் இந்தத் தொடரில் இவர் முக்கியமென்ற நிலையில் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியா தொடரில் மனைவியின் உடல் நலக் குறைவு காரணமாக ஓய்வு வழங்கப்பட்ட சிகர் தவான் மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.

இந்தியா அணியின் முக்கிய இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களான ரவீந்தர் ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் இத்தொடரிலும் சேர்க்கப்படவில்லை. ஜனவரி மாதம் வரை இந்தியா அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடப் போவதில்லை. எனவே இவர்களுக்கான ஓய்வு தேவையில்லை. அக்ஸார் பட்டேல், உபாதையடைந்து போது ரவீந்தர் ஜடேஜா மேலதிக வீரராக அவுஸ்திரேலியா தொடருக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஆனால் விளையாடும் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

அணி விபரம் - விராத் கோஹ்லி (தலைவர்), ரோஹித் ஷர்மா (உப தலைவர்), சிகர் தவான், லோகேஷ் ராகுல், மனிஷ் பாண்டே கேதார் யாதவ், தினேஷ் கார்த்திக், எம்.எஸ். டோனி, ஹார்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திரா ஷகால், ஜஸ்ப்ரிட் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஆஷிஷ் நெஹ்ரா, அக்சர் பட்டேல்.

Face Book Setup 01

 

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி