இந்தியா டுடே ஊடக நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தியாவின் சக்தி வாய்ந்த 50 நபர்களின் பட்டியல் பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடம் பெற்றுள்ளார். கடந்த ஆண்டும் இவரே முதலிடம் பெற்றிருந்தார்.
இந்த பட்டியலில் கொலிவுட்டின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர்களுக்கு முதல்முறையாக இடம் கிடைத்துள்ளது. ரஜினிகாந்த் 34ஆவது இடத்திலும் கமல்ஹாசன் 45ஆவது இடத்திலும் உள்ளனர்.
மேலும் இந்த பட்டியலில் சர்ச்சைக்குரிய பாஜக முத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி 20ஆவது இடத்திலும் எழுத்தாளர் குரு மூர்த்திக்கு 30ஆவது இடமும், ஒலிம்பிக் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு 36ஆவது இடமும், இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராத் கோஹ்லிக்கு 11ஆவது இடமும் கிடைத்துள்ளது.
மேலும் பொலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு 15ஆவது இடமும், ஷாருக்கானுக்கு 40ஆவது இடமும், அக்சயகுமாருக்கு 44ஆவது இடமும் அமீர்கானுக்கு 47ஆவது இடமும் கிடைத்துள்ளது.
முதல் 10 இடங்கள்
- முகேஷ் அம்பானி (ரிலையன்ஸ் நிறுவனர்)
- ரத்தன் டாடா (டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர்)
- கே.எம்.பிர்லா (ஆதித்யா பிர்லா குழுமத் தலைவர்)
- கெளதம் அதானி (அதானி குழுமத் தலைவர்)
- பாபுராம் தேவ்
- ஆனந்த் மஹிந்த்ரா (மஹிந்திரா குரூப்)
- உதய் கோடாக் (கோடாக் மஹிந்திரா நிறுவனம்)
- திலிப் சங்வி (தொழிலதிபர்)
- ஆசிம் பிரேம்ஜி (விப்ரோ நிறுவனம்)
- என்.சந்திரசேகரன் (டாடா சன்ஸ் தலைவர்)