64ஆவது இந்திய தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, தமன்னா நடித்த 'தர்மதுரை' படத்தில் கவியரசர் வைரமுத்து எழுதிய 'எந்த பக்கம்' என்ற பாடலுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.
வைரமுத்து இந்த விருதை 7ஆவது முறையாக பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் முதல்மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, ஆகிய ஆறு படங்களுக்கு எழுதிய பாடல்கள் மூலம் வைரமுத்து தேசிய விருதினை பெற்றுள்ளார்.
தேசிய விருது பெற்றது குறித்து கவியரசு வைரமுத்து கூறியபோது, '7ஆவது முறையாக தேசிய விருது கிடைத்தது தமிழுக்கு கிடைத்த பெருமை, எனக்கு விருது கிடைத்ததில் பெருமை மொழிக்குதான் நான் வெறும் கருவிதான். நான் எழுதிய பாடல் தற்கொலைக்கு எதிரானது, தர்மதுரை படத்தில் நடித்த அனைவருக்கும் எனது நன்றி' என்று கூறியுள்ளார்.