lan sinlan eng

600 திரையரங்குகளில் வெளியாகிறது “பாகுபலி 2“

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

கொலிவுட் திரையுலகில் இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி மற்றும் அஜித்தின் 'என்னை அறிந்தால்' ஆகிய படங்கள் தமிழகத்தில் 600ற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.

இந்த நிலையில் ரஜினி, அஜித் படங்களை அடுத்து எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் தமிழகத்தில் 600ற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இம்மாதம் 28ஆம் திகதி தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள 'பாகுபலி 2' படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

முதல் பாகத்தின் மாபெரும் வெற்றி, கட்டப்பாவின் இரகசியம், முன்னோட்டத்திற்பு கிடைத்த உலகளாவிய வரவேற்பு ஆகியவை இந்த படத்தின் எதிர்பார்ப்புக்கு காரணமாக உள்ளது.

இந்த நிலையில் 'பாகுபலி 2' படத்தை வெளியிட கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் முன்வந்துள்ளதால் தற்போதைய தகவலின்படி தமிழகம் முழுவதும் 600ற்கும் மேற்பட்ட திரையரங்குகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு எம்.எம்.கீரவானி இசையமைத்துள்ளார்.

கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவில், வெங்கடேஸ்வரராவ் படத்தொகுப்பில் இந்த படம் சுமார் இந்திய மதிப்பில் 250 கோடி ரூபா செலவில் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Face Book Setup 01

 

Back to top
Go to bottom