யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, ஆழியவளை பகுதியைச் சேர்ந்த கந்தசாமி தங்கத்துரை என்ற மீனவருடைய வலையில் சுமார் ஒன்றரைக் கோடி பெறுமதியான பாரை மீன்கள் அகப்பட்டுள்ளன.
நேற்று செவ்வாய்க்கிழமை காலை கரைவலை வீசிய க.தங்கத்துரை என்ற மீனவருடைய வலையிலேயே சுமார் 20 ஆயிரம் கிலோ பாரை மீன்கள் அகப்பட்டுள்ளன.
இதன் நேற்றைய சந்தைப் பெறுமதி, இலங்கை ரூபாயில் ஒன்றரைக் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
காலை முதல் மாலை 4 மணி வரை மீன்கள் நிறுக்கப்பட்டுள்ளதுடன் உடனடியாகவே பிடிக்கப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை குறித்த மீனவர் தனக்கு உதவிய சக மீனவர்களுக்கு தலா 2 மீன்கள் வீதம் 30ற்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு வழங்கியுள்ளார்.
இவ்வாறான அதிஷ்டம் மீனவர்களுக்கு எப்போதாவது கிடைப்பதாகவும் இவ்வாறு மீன் படுவது ஆச்சரியம் எனவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.