வரிநிலுவை காரணமாக வொடபோன் (Vodafoen) நிறுவனத்துக்கு இந்திய வருமான வரித்துறை சுமார் 16,000 கோடி ரூபா அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஹொங்ககொங் பங்குச் சந்தைக்கு வொடபோன் தெரிவிக்கையில் இதன் கிளையான ஹட்கின்சன் டெலிகம்யூனிகேஷன் நிறுவனம் கடந்த ஆண்டு 16,000 கோடி வரி செலுத்துமாறு அறிவித்தல் கிடைத்தது எனவும், ஓகஸ்ட் 9ஆம் திகதி இதே தொகைக்கு அபராத உத்தரவையும் பெற்றதாகக் கூறியுள்ளது.
ஆனால் இந்த வரிவிதிப்பு செல்லுபடியாகுமா என்பதை வொடபோன் பரிசீலித்து வருகின்றது.
32,860 கோடி ரூபா வர்த்தக நடவடிக்கைகளின் மூலம் பெற்ற 32,860 கோடி மூலதன இலாபம் மீது 16,000 கோடி வரி விதித்து அதற்கான அறிவித்தலை இந்திய வருமான வரித்துறை ஜனவரி 25ஆம் திகதி அனுப்பியது.
தற்போது இதே தொகைக்கு அபராதம் விதித்து அறிவித்தல் அனுப்பியுள்ளது வருமான வரித்துறை.
தற்போது சிக் ஹட்கின்சன் நிறுவனத்தின் ஒரு பகுதியாக விளங்கும் ஹட்கின்சன் வாம்ப்பா நிறுவனத்திடமிருந்து வொடபோன் நிறுவனம் 2007ஆம் ஆண்டு 67% பங்குகளை வாங்கியது. இதன் மூலதன இலாபம் மீது முந்தைய காலக்கட்டத்தையும் இணைத்து வருமான வரித்துறை வரி விதிப்பு செய்துள்ளது.
இவ்வாறு முந்தைய காலக்கட்டத்தையும் கணக்கிலெடுத்துக் கொண்டு வரிவிதிப்பு செய்வது சர்வதேச வர்த்தக விதிமுறைகளுக்குப் புறம்பானது என்று வொடபோன் நிறுவனம் வாதாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.