மணிரத்னம் இயக்கவுள்ள புதிய படத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, துல்கர் சல்மான், ஃபகத் பாசில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும். 'காற்று வெளியிடை' படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் படத்துக்காக பல்வேறு நடிகர்களை சந்தித்து பேசி வருவதாக செய்திகள் வெளியாகின.
தற்போது இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகவுள்ளதாம். இதில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, துல்கர் சல்மான் மற்றும் பகத் பாசில் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாராம் மணிரத்னம்.
மணிரத்னம் தரப்பிலிருந்து எந்தவொரு தகவலையும் உறுதிப்படுத்தவில்லை. அனைத்தும் முடிவானவுடன், விரைவில் தனது அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று அவருடைய அலுவலகத்திலிருந்து தெரிவித்தார்கள்.
தற்போதைக்கு ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் மற்றும் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் மட்டுமே மணிரத்னத்தின் அடுத்த படத்துக்கு உறுதிசெய்யப்பட்டு உள்ளார்கள்.