'மெர்சல்' படத்தின் இசை உரிமை, கடும் போட்டிக்கு இடையே பெரும் விலை கொடுத்து கைப்பற்றியுள்ளது சொனிமியுசிக் நிறுவனம்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. ஓகஸ்ட் 20ஆம் திகதி படத்தின் இசை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இப்படத்தின் இசை உரிமையைக் கைப்பற்ற, கடும் போட்டி நிலவியுள்ளது. பெரும் விலை கொடுத்து இதன் உரிமையைக் கைப்பற்றியுள்ளது சொனிமியுசிக் நிறுவனம். மேலும், சமீபத்தில் வேறு எந்தவொரு படத்தின் இசை உரிமையும் இந்த விலைக்குப் போனதில்லை என்று இசை உலகில் பணியாற்றும் ஒருவர் தெரிவித்தார். இதுவரை 'மெர்சல்' பர்ஸ்ட் லுக் மட்டுமே வெளியாகியுள்ளது.
சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளார்கள். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.