அஜித்தின் விவேகம் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகின்றன.
மூன்றே நாளில் அஜித் இப்பட டப்பிங்கை முடித்திருக்கிறார். படமும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி வெளியாகிவிடும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அதிக லைக்ஸ் பெற்ற ஒரே டீஸர் ரஜினியின் கபாலி (463K) என்று கூறப்பட்ட நிலையில் அந்த சாதனையை விவேகம் டீஸர் முறியடித்துள்ளது.
விவேகம் பட டீஸர் (465K) லைக்ஸ் பெற்று முதல் இடத்தை பிடித்திருக்கிறது.
இந்த சந்தோஷத்தை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் #VIVEGAMMostLikedTamilTeaser என்ற ஹேஸ் டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.