lan sinlan eng

சந்திரனில் உருளைக்கிழங்கை வளர்க்கிறது சீனா

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

சந்திரனில் உருளைக்கிழங்கை வளர்க்க சீன அறிவியலாளர்கள் முயற்சி செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாங்கிங் பல்கலைகழகத்தின் பேராசிரியரான ஜி ஜெங்ஜின்," அடுத்த ஆண்டு செயற்படுத்தப்படவுள்ள சாங்ஜி-4 திட்டத்தின் ஒரு பகுதியாக, இங்கு நிலவுவது போன்ற சுற்றுச்சூழல் கொண்ட ஒரு சிறிய பெட்டகத்திற்குள் உருளைக்கிழங்குகள் அடைக்கப்படும்.

பூமியின் ஒரே இயற்கை செயற்கைக்கோளின் (நிலவு) மேற்பரப்பில் உள்ள சிறிய சிலிண்டருக்குள் சில பட்டுப்பூச்சி லார்வாக்களும் அடைக்கப்படும். "என சாங்கிங் மோர்னிங் போஸ்ட் நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார்.

சந்திரனின் மேற்பரப்பில் பூச்சிகள் அல்லது கிழங்குகள் தாக்குப்பிடிக்குமா என்பதை கண்டறிவதே இந்த முயற்சியின் நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியில் கிடைக்கும் முடிவுகளைக் கொண்டு எதிர்காலத்தில் சந்திரனில் மனித வசிப்பிடங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த சில முக்கிய தகவல்கள் கிடைக்கலாம்." என சீன சர்வதேச வானொலி தெரிவித்துள்ளது.

Face Book Setup 01

 

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி