இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கடல் கடந்தும் இரசிகர்கள் பலர் உள்ளனர். படங்களில் இசையமைப்பது மட்டுமல்லாது வெளிநாடுகளில் பல இசை கச்சேரிகளை நடத்தி வருகிறார்.
தற்போது அவரின் 25 வருட திரைப்பயணத்தை ஒட்டி இசை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளார். Yesterday, Today, Tomorrow என்கிற இந்த நிகழ்ச்சி லண்டனில் எதிர்வரும் ஜூலை 8ஆம் திகதி கோலாகலமாக நடைபெறவுள்ளது.
இது தொடர்பில் ரஹ்மான் தெரிவிக்கையில் “என் இசைப்பயணம் மறக்கமுடியாதது. இரசிகர்களின் அன்பை பெற நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன். அவர்களின் ஆதரவு ஊக்கம் தருகிறது என அவர் கூறியுள்ளார்.
ரோஜாவில் தொடங்கி காற்று வெளியிடை வரை என இசை நினைவுகளை கொண்டாடும் பயணமாக லண்டன் நிகழ்ச்சி அமையும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.