சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'விவேகம்' படத்தின் டீஸர் உலக சாதனையை படைத்துள்ளது.
சமூக வலைதளத்தில் அஜித் - விஜய் இருவரது படங்களின் டீஸர், ட்ரெய்லர் வெளியாகும் போது யார் சாதனை படைக்கிறார்கள் என்ற போட்டி நிலவும். இதுவரை மாறி மாறி சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்கள்.
சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் நடிப்பில் வெளியான படம் 'விவேகம்'. இதன் டீஸர் மே 10ஆம் திகதி இணையத்தில் வெளியிடப்பட்டது. சமூக வலைதளத்தில் பலராலும் பகிரப்பட்டு, பாராட்டைப் பெற்றது.
தற்போது உலகளவில் அதிக விருப்பங்களைப் பெற்ற டீஸர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது 'விவேகம்'. இதற்கு முன்பாக 'ஸ்டார்வார்ஸ் - தி லாஸ்ட் ஜெடி' என்ற ஹொலிவுட் படத்தின் டீஸர் 5,72,000 லைக்குகளைப் பெற்றிருந்தது. அதனை கடந்துள்ளது 'விவேகம்' படத்தின் டீஸர்.