lan sinlan eng

உணவும் பானமும்

நியூயோர்க்கை ஆச்சரியத்தில் ஆழ்த்திய பிரியங்கா

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

பெசன் உலகின் ராணி என அழைக்கப்படும் பிரியங்கா சோப்ராவின் ஆடைகள் தொடர்பில் ஆடைகளைப்பற்றி ஒரு படமே எடுக்கலாம். அந்த அளவுக்கு நவீன உலகைக் காதலிப்பவர், பிரியங்கா.

நியூயோர்க்கில் உள்ள மெட் கலாவில் (Met Gala) நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார் பிரியங்கா.

இதில் அவர் அணிந்து வந்த 'ட்ரென்ஸ்கோட்' அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.  

தலை முதல் கால் வரை இவரின் சிகை அலங்காரம் மிகவும் நேர்த்தியாக இருந்தது. பிரியங்காவின் முடி அலங்காரம் மற்றும் கணுக்காலில் அவர் அணிந்திருந்த கறுப்பு நிற பூட்ஸ், அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

பிரியங்காவின் இந்த ட்ரென்ஸ்கோட்டை வடிவமைத்தவர், ரால்ப் லாரன். இவர், விழாவின்போது பிரியங்காவின் கூடவே இருந்தார்.

பெசன் அண்ட் லைஃப் இதழில், பிரியங்காவின் இந்த ஆடை சிறந்த ஆடையாக இடம்பெற்றது.

பிரியங்காவின் இந்த ட்ரென்ஸ்கோட்டைப் பற்றி ட்விட்டரில் பல தரப்பட்ட விவாதங்கள் நடந்துவருகின்றன.

சிலர், இந்த ஆடை துப்பறிவாளர் மாதிரி உள்ளது எனவும், இன்னும் சிலர் பிரியங்கா பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவராக இருப்பார் போல எனவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

Face Book Setup 01

 

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி