'மெர்சல்' படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிடவுள்ளதாக வெளியான செய்திக்கு படத்தொகுப்பாளர் ரூபன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மெர்சல்'. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்கள். இதனால் பெரும் சர்ச்சை உருவாகி அடங்கியுள்ளது.
இந்நிலையில், 'மெர்சல்' படத்தின் நீளம் கருதி நீக்கப்பட்ட காட்சிகள் வெளியிடப்படும் என்று தொகுப்பாளர் ரூபன் கூறியதாக செய்திகள் வெளியாகின. இதற்கு அவர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து எடிட்டர் ரூபன் கூறுகையில் “'மெர்சல்' படத்தில் நீக்கப்பட்ட காட்சிகளைப் பற்றி நான் எதுவும் பேசவில்லை. சில பாடல்களும், நகைச்சுவை காட்சிகளும் நீளம் கருதி நீக்கப்பட்டது. இப்போதைக்கு நீக்கப்பட்ட எந்த காட்சிகளும், பாடல்களும் வெளியிடப்படப்போவதில்லை. வதந்திகளைப் பரப்பாதீர்கள்“ என்றார்.