ரஷ்யா வீராங்கனை மரியா ஷரபோவா மீண்டும் டென்னிஸ் போட்டிகளில் களமிறங்கியதும் வெற்றி வாகை சூடியுள்ளார்.
தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பாவித்தார் என்பது கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து ஒன்றரை வருடங்கள் இவருக்கு தடை விதிக்கப்பட்டது. தான் வேண்டுமென்று அந்த மருந்தை பாவிக்கவில்லை எனவும், 10 வருடங்களாக தனது மருத்தவ தேவைக்காக அந்த மருந்தை தான் பாவித்ததாகவும் ஷரபோவா தெரிவித்திருந்தார்.
அண்மையில் சீனாவில் நிறைவடைந்த டியான்ஜின் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் பெலரஸ் வீராங்கனை அரினா சபலங்காவை 7-5, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் பட்டம் வென்றார்.
மரியா ஷரபோவா மகளிருக்கான க்ரான்ஸ்லாம் பட்டங்கள் ஐந்தை வெற்றிகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.