புகழ்பெற்ற பிரான்ஸ் ஓவியர் லியனாடோ டாவின்ஸி வரைந்த இயேசுநாதர் ஓவியம் ஏலத்துக்கு விடப்படவுள்ளது.
அமெரிக்காவின் கிரிஸ்டீஸ் ஏல மையம் மிகவும் அரிதான அந்த ஓவியத்தை நியூயோர்க்கில் அடுத்த மாதம் 15ஆம் திகதி ஏலத்துக்கு விடவுள்ளது.
டாவின்ஸியால் வரையப்பட்ட ஓவியம் என்று ஒப்புக்கொள்ளப்பட்ட தனியார் வசமிருக்கும் கடைசி ஓவியம் இது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் இரட்சகர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஓவியம், 1500ஆம் ஆண்டு வரையப்பட்டது எனக் கூறப்படுகிறது.
உலக உருண்டையை கையில் வைத்து இயேசுபிரான் ஆசி வழங்குவதைப் போல காட்சியளிக்கும் உலகின் இரட்சகர் ஓவியம் பிரித்தானிய மன்னர் முதலாம் சார்ள்ஸிடமிருந்து வந்தது.
தேசத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில் பிரித்தானிய நாடாளுமன்றம் அவருக்கு 1649ஆம் ஆண்டு மரணதண்டனை நிறைவேற்றிய பின்னர் அவரிடமிருந்த பொருட்களின் பட்டியலில் இந்த ஓவியமும் இடம்பெற்றிருந்தது.
ஏலத்துக்கு வரவிருக்கும் உலகின் இரட்சகர்| ஓவியம், 10 கோடி டொலருக்கு விலைபோகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.