தமிழில் உருவாகவுள்ள 'அர்ஜுன் ரெட்டி' ரீமேக்கின் மூலம் நாயகனாக அறிமுகமாகவுள்ளார் விக்ரமின் மகன் துருவ்
'அர்ஜுன் ரெட்டி'படத்தின் தமிழ் மற்றும் மலையாள ரீமேக்/ டப்பிங் உரிமையை கடும் போட்டிக்கும் இடையே இ4 எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. இதன் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனை விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இயக்குநர் மற்றும் படக்குழுவினர் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
தெலுங்கு திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இறுதியாக மலையாளத் திரையுலகின் முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான இ4 எண்டர்டெயின்மண்ட் நிறுவனம், தமிழ் மற்றும் மலையாள ரீமேக் உரிமையைக் கைப்பற்றி இருக்கிறது. தமிழ் ரீமேக் உரிமையை விற்பனையானதைத் தொடர்ந்து, தமிழகத்தில் 'அர்ஜுன் ரெட்டி' திரையிடல் நிறுத்தப்பட்டுள்ளது.
சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆகஸ்ட் 25-ம் தேதி வெளியான தெலுங்கு படம் 'அர்ஜுன் ரெட்டி'. குறைந்த திரையரங்குகளில் வெளியாகி, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று கிடைத்த வரவேற்பால் திரையரங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்த்தப்பட்டது