lan sinlan eng

புற்றுநோய் ஏற்பட இதுவா காரணம்?

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

நீண்ட காலமாக ஆண்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்பவர்களின் குடலில் ஒரு வித வளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அது புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணியாகவும் அமையலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வயிற்றில் உண்டாகும் பல விதமான கிருமி பெருக்கத்தால் கட்டிகள் உருவாவதற்கு காரணமாக அமைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதை தங்களின் புதிய ஆராய்ச்சி முடிவோடு இணைத்து ஆராய்ச்சியாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஜர்னல் கட் என்ற மருத்துவ இதழில் ஆராய்ச்சியாளர்களின் இந்தக் கட்டுரை வெளியாகியுள்ளது.

ஆனால், இதுகுறித்து கருத்துத் தெரிவித்த மருத்துவ நிபுணர்கள், ஆரம்ப நிலையில் உள்ள இந்த ஆராய்ச்சி முடிவுகள் குறித்து மேலும் ஆய்வுகள் தேவையென்றும், அதனால் ஆண்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்வதை மக்கள் நிறுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

குடல் சுவரில் உண்டாகும் பாலிப்பஸ் என்ற சிறு சிறு கட்டிகள், பிரிட்டனின் மக்கள் தொகையில் 15 முதல் 20 சதவீதம் பேரை பாதிப்படையச் செய்கிறது.

பெரும்பாலான சமயங்களில், அவை எந்த அறிகுறியும் ஏற்படாமல் புற்றுநோயாக மாறாமல் இருப்பதுண்டு. அதே வேளையில், சில சமயங்களில் சிகிச்சை அளிக்கப்படவில்லையெனில் இவை புற்றுநோயாக மாறக்கூடும்.

செவிலியர் சுகாதார ஆராய்ச்சி என்றழைக்கப்படும் ஒரு நீண்ட கால அமெரிக்க ஆராய்ச்சி பாதையில் பங்கேற்ற 16,000 செவிலியர்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளை இந்த ஆராய்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள் உற்று நோக்கியுள்ளனர்.

ஆண்டிபயாடிக்கை நீண்ட காலம் உட்கொள்பவர்களுக்கு ஏற்படும் ஆபத்தை ஆராயும் போது, இந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகளின்படி தனி நபர்களுக்கு ஏற்படும் ஆபத்தின் அளவை சரியாக கணிப்பது மிகவும் சிரமம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏனெனில், இந்த ஆராய்ச்சி புற்றுநோய் குறித்து கவனம் செலுத்தவில்லை. புற்றுநோய் உண்டாவதற்கான காரணிகளைத்தான் உற்று நோக்குகிறது.

குடல் புற்றுநோய் உண்டாவதற்கு, மிகுதியான மதுப்பழக்கம், புகைப்பழக்கம், குடும்ப ரீதியான குடல் புற்று நோய், உணவு பழக்கம் என பல காரணங்கள் உண்டு.

இந்த ஆராய்ச்சி முடிவுகள் குறித்து விளக்கிய மருத்துவர் குருக்க்ஷங், ஆண்டிபயாடிக் உட்கொள்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் ஆபத்து மிகவும் குறைவாகவும், அதன் தன்மை மிகவும் மாறுபட்டதாகவும் உள்ளதாக கூறினார்.

இதனிடையே, இது குறித்து கருத்து தெரிவித்த மருத்துவர் ஜஸ்ட் கூறுகையில், ''இந்த ஆராய்ச்சியின் மூலம் இது குறித்த சரியான காரணம் மற்றும் பாதிப்பு குறித்து அறிய முடியாது. ஆனால், ஆண்டிபயாடிக்கை நீண்ட காலம் உட்கொள்பவர்களுக்கு அதிகப்படியான புற்றுநோய் ஆபத்து ஏற்படுமா என்று பரிந்துரைக்க இந்த ஆராய்ச்சி ஒரு படி முன்னோக்கி செல்கிறது'' என்று எடுத்துரைத்தார்.

Face Book Setup 01

 

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி