இணையத்தில் தீவிரவாதக் கருத்துகள் பரப்பப்படுவற்கு எதிராக தொழில்நுட்ப நிறுவனங்கள் எடுத்துவரும் முயற்சிகளை கூகுள் ஆதரவு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபை கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னதாக கருத்து வெளியிட்டுள்ள கூகுளின் மூத்த துணைத் தலைவர் கென்ட் வோல்க்கர், ட்விட்டர் சுமார் ஒரு மில்லியன் கணக்குகளை நீக்கியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
தமது கொள்கைகள் மற்றும் அமலாக்கத்தை மேம்படுத்துவதற்காக பேஸ்புக், யு டியூப் உள்ளிட்ட நிறுவனங்கள் கடுமையாக உழைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், இணையத்தில் உள்ள தீவிரவாத கருத்துக்களை நீக்குவதில் தொழில்நுட்ப நிறுவனங்கள் கட்டாயம் விரைவாகவும் முன்னோக்கியும் செயல்பட வேண்டும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.
தீவிரவாத கருத்துக்களை இரண்டு மணிநேரத்திற்குள் நீக்குவதற்கான வழிகளை சமூகவலைதளங்களும், தேடுதல் இயந்திரங்களும் கண்டுபிடிக்க வேண்டுமென அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.