lan sinlan eng

சமூகவலைதளத்தை ஆட்கொண்டுள்ள 'ஆளப்போறான் தமிழன்'

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'மெர்சல்' படத்தின் 'ஆளப்போறான் தமிழன்' சமூகவலைதளத்தை ஆட்கொண்டுள்ளது.

'மெர்சல்' படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். அவருடைய இசையில் உருவாகியுள்ள பாடல்களில் 'ஆளப்போறான் தமிழன்' பாடல் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் அதிகம் பேர் இப்பாடல் தொடர்பாக தேடியதாக கூகுள் ட்ரெண்ட்ஸ் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளது.

மேலும், வேல்ட் மியூசிக் அவார்ட்ஸ் ட்விட்டர் பக்கத்தில் 'ஆளப்போறன் தமிழன்' பாடல் சமீபத்திய இந்தியாவின் முதல் பாடல் என்று அறிவித்துள்ளது. இவ்விரண்டு அறிவிப்பால் படக்குழு மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறது.

தமிழ் மொழியின் பெருமையை பற்றிய பாடல் என்பதால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இப்பாடலைத் தேடி கேட்டதால் இந்தப் பெருமையை எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'ஆளப்போறான் தமிழன்' பாடல் போக, மேலும் 4 பாடல்கள் 'மெர்சல்' படத்தில் இடம்பெற்றுள்ளது. ஓகஸ்ட் 20ஆம் திகதி இப்படத்தின் முழுமையான இசையை வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது.

Face Book Setup 01

 

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி