lan sinlan eng

ரஜினியின் அரசியல் நுழைவை எதிர்நோக்கியுள்ளேன்

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

ரஜினியின் அரசியல் நுழைவை எதிர்நோக்கியிருப்பதாக டெல்லியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தனுஷ் தெரிவித்துள்ளார்.

செளந்தர்யா ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தை  விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதில் தனுஷ், கஜோல் மற்றும் இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது ரஜினி அரசியலில் நுழையவிருப்பது குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்

“எனக்கு அரசியல் தெரியாது. அதனால் அதைப் பற்றி பேச விரும்பவில்லை. தற்போதைக்கு ரஜினியின் மனதில் என்ன இருக்கிறது எனத் தெரியவில்லை. ஆனால், அவர் என்ன செய்தாலும் அதை சரியாக மட்டுமே செய்வார். அனைவரையும் போல நானும் அவருடைய அரசியல் நுழைவை எதிர்நோக்கியுள்ளேன்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Face Book Setup 01

 

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி