lan sinlan eng

கைதிகளை எய்ட்ஸ் பரிசோதனைக்கு உட்படுத்த திட்டம்

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை எய்ட்ஸ் பரிசோதனைக்கு உட்படுத்தும் திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அரச எய்ட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே கருத்து தெரிவித்த போது சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.

சிறைக் கைதிகள் மத்தியில் எய்ட்ஸ் நோய் கூடுதலாக பரவும் அவகாசம் காணப்படுவதாக கூறிய வைத்தியர் லியனகே, இதன்படி முதல் கட்டமாக கைதிகளை இரத்த பரிசோதனைகளுக்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

அவ்வாறு அடையாளம் காணப்படும் நோயாளர்களுக்கு தகுந்த சிகிச்சை வழங்கப்படவுள்ளது.

அதேவேளை இந்த வருடத்தின் கடந்த ஆறு மாதங்களுக்குள் எச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்ட 130 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக எய்ட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இது ஒரு பாரிய அதிகரிப்பு என்று கூறிய அந்த பிரிவு கடந்த ஆண்டு எச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்ட 273 பேர் அடையாளம் காணப்பட்டதாக அறிவித்துள்ளது.

எனவே இவ்வருட இறுதிக்குள் 11 இலட்சம் பேருக்கு எய்ட்ஸிற்கான இரத்த பரிசோதனைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்ட வைத்தியர் சிசிர லியனகே கடந்த ஆண்டு பத்து இலட்சம் இரத்த பரிசோதனைகள் மேட்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.

Face Book Setup 01

 

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி