“கும்கி 2“ படத்தின் மூலமாக தமிழில் நாயகியாக அறிமுகமாகவுள்ளார் நடிகர் ராஜசேகரின் மகள் ஷிவானி
நடிகர் ராஜசேகர் - ஜீவிதா ஆகியோரின் மகள் ஷிவானி தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகவுள்ளார். நடிக்கவிருப்பது அவர் தெரிவிக்கையில் "அப்பாவும், அம்மாவும் நடிகர்கள் என்பதால் சினிமா பற்றியும், நடிப்பு பற்றியும் சிறுவயதிலிருந்தே அறிமுகம் உள்ளது. சிறுவயதிலிருந்தே பரதநாட்டியம், குச்சுப்புடி போன்ற நடன பயிற்சிகளை பயின்றுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
"கும்கி 2“ படக்குழுவினர் ஷிவானியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். விரைவில் அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்.
அவருக்கான “டெஸ்ட் சூட்“ முடிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்" என்று படக்குழுவினர் சார்பில் தெரிவித்துள்ளார்கள்.
2012ஆம் ஆண்டு வெளியான 'கும்கி' படத்தைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தையும் இயக்கவுள்ளார் பிரபுசொலமன்.
ஜூலையிலிருந்து மாறும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளா காட்டுப்பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த முடிவெடுத்துள்ளார்கள்.