அஜித் நடிப்பில் உருவாகி வரும் 'விவேகம்' படத்தின் இசை உரிமையை கடும் போட்டிக்கு இடையே சொனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
'மங்காத்தா', 'பில்லா 2', 'ஆரம்பம்', 'என்னை அறிந்தால்' மற்றும் 'வேதாளம்' என தொடர்ச்சியாக அஜித் படங்களின் இசை உரிமையை சொனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தற்போது அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'விவேகம்'. சிவா இயக்கியுள்ளார்.
'விவேகம்' இசை உரிமையைக் கைப்பற்றுவதற்கும் கடும் போட்டி நிலவியது. இப்படத்தின் உரிமையையும் சொனி நிறுவனமே கைப்பற்றியுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் நேற்றிரவு அந்த நிறுவனம் அறிவித்தது.
அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
இறுதிகட்ட பணிகளை முடித்து ஓகஸ்ட் 10ஆம் திகதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.