சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் நடந்து முடிந்துள்ளது.
ஏற்கனவே ரஜினி தன் இரசிகர்களை சந்தித்து அரசியல் பற்றி பேசியது பலருக்கும் ஒரு திருப்பமாக இருந்தது.
இந்நிலையில் அவரை மகாராஷ்ராவின் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ருதா நேரில் சந்தித்துள்ளார்.
இவர் ஒரு வங்கி அதிகாரி மட்டுமல்லாது ஒரு பாடகரும் கூட. மேலும் சமூக சேவைகளும் செய்து வருகிறார்.
இந்த சந்திப்பில் அம்ருதா சமூக சேவைகள் குறித்து பேசியதாக ட்விட்டரில் கூறியுள்ளார்.