lan sinlan eng

கொஸிப்

“காலா“ முக்கிய பாத்திரத்தில் சமுத்திரக்கனி

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்தில், முக்கிய கதாபாத்திரத்துக்கு சமுத்திரக்கனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'2.0' படத்தைத் தொடர்ந்து மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் ரஜினி. தனுஷ் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னையில் மும்பை தாராவி பகுதிகளை அரங்குகளாக அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஹியூமா குரேஷி நாயகியாக ஒப்பந்தமாகியுள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.

மும்பையில் முதற்கட்ட படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சென்னையில் நடைபெறவுள்ள படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொள்ளவுள்ளார். மேலும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்துக்கு சமுத்திரக்கனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Face Book Setup 01

 

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி