‘பாகுபலி 2’ இந்திய சினிமாவே பெருமைப்படும் அளவிற்கு வெற்றி நடைப்போடுகின்றது. இப்படத்திற்காக ஆயிரக் கணக்கானவர்கள் சுமார் 5 வருடம் உழைத்துள்ளனர்.
இப்படத்திற்காக பிரபாஸ் 60 கோடி வரை சம்பளமாக பெற்றதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் இப்படம் 1000 கோடி வரை வசூல் செய்யும் என பொக்ஸ் ஒப்பிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
அப்படி வசூல் வரும் பட்சத்தில் ராஜமௌலியின் சம்பளம் மாத்திரம் 100 கோடி இருக்கும் என கிசுகிசுக்கப்படுகின்றது.
பொலிவுட்டை கலக்கும் நடிகர்களை விட இவரின் சம்பளம் அதிகம் என்பதால் வட இந்தியாவே கொஞ்சம் அதிர்ச்சியில் தான் உள்ளது.