நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் சுமார் நான்கரை இலட்சம் (இந்திய ரூபா) இலட்சம் மோசடி செய்ததாக சென்னை வண்ணாரப்பேட்டை பொலிஸ் நிலையத்தில் இளைஞர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
சென்னை புது வண்ணாரப்பேட்டை, அன்னை இந்திராகாந்தி நகரைச் சேர்ந்தவர் தயாநிதி (32), இவர் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு பலரையும் சென்று பார்த்துள்ளார்.
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் சினிமாவில் நடிக்க வைப்பதாக தெரிந்துக்கொண்டு 2015ஆம் வருடம் அவரை அணுகியுள்ளார். தயாநிதியிடம் பணத்தைப் பெற்ற பவர் ஸ்டார் சீனிவாசன் பின்னர் படத்திலும் நடிக்க வாய்ப்பு வாங்கித்தரவில்லை, பணத்தையும் திருப்பித்தரவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து தயாநிதி, நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனின் பண மோசடி பற்றி வண்ணாரப்பேட்டை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.