இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிற்கான சுய விபரத்தில் ஒருவேளை நான் இரண்டு வரியில் விண்ணப்பத்திருந்தால் அதற்கு எனது பெயரே போதுமானதாக இருந்திருக்கும் என்று விரேந்திர செவாக் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கான சுய விபரத்தில் வெறும் இரண்டு வரிகளில் செவாக் விண்ணப்பித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் முழு விதிமுறைகளுக்கு உட்பட்டே தான் பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பித்துள்ளதாக தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் செவாக் தெரிவித்துள்ளார்.
"இந்திய பயிற்சியாளர் பொறுப்புக்கான சுய விபரத்தில் நான் இரண்டு வரியில் விண்ணப்பித்தாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த இரண்டு வரி என்னவென்று ஊடகங்கள் வெளியிட்டால் நான் மகிழ்ச்சி அடைவேன்.
ஒருவேளை நான் இரண்டு வரியில் விண்ணப்பித்திருந்தால் அதற்கு எனது பெயரே போதுமானதாக இருந்திருக்கும்"
கங்குலிதான் எனக்கு பிடித்த இந்திய தலைவன், கங்குலிதான் எனக்கு எப்படி பொறுமையாக இருக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்தார். மேலும் சச்சின்தான் நான் ஒரு கிரிக்கெட் வீரராக வளர வழி நடத்தி எனக்கு நம்பிக்கையையும் அளித்தார்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.