அறிவு தரும் புத்தகங்களை படிக்க வேண்டும். இதனால் தாயிடமிருந்து கருவிலுள்ள சிசு பெரும்பாலான விடயங்களை பெற்றுக் கொள்ளும்.இதனால் பிரசவத்திற்கு பின் குழந்தை கருவறையில் இருக்கும் போது கற்றுக்கொண்ட விடயங்களை வைத்து வளர ஆரம்பிக்கிறது.
குழந்தைக்கு காற்றோட்டமான, அமைதியான மற்றும் சுத்தமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பு தாயினுடையது.கொஞ்சமாக வளர்ந்த அதாவது மூன்று மற்றும் நான்கு வயதுடைய குழந்தைகள் யாரிடம் அதிகமாக பழகுகின்றார்களோ அவர்களின் செயற்பாடுகளை அப்படியே பின்பற்ற தொடங்கிவிடுவார்கள்.
எனவே இந்த வயதில் குழந்தைகளிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும் என சொல்கிறது ஆய்வுகள்.குழந்தைகள் செய்யும் ஆக்கங்களை பாராட்ட வேண்டும். வாய்விட்டு பாராட்டுவதால் அவர்களது திறமைகள் அவர்களுக்குள்ளேயே முடக்கப்படாமல் வெளிவரும்.
தவறு செய்தால் அதனால் ஏற்படும் தீமை குறித்து புரியவைக்க வேண்டும்.அதனை விடுத்து நாம் திட்டுவதால் உள ரீதியாக அவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். மேலும் ஒரு குழந்தையை நாம் திட்டுவதால் குழந்தையின் மூளையிலுள்ள 25000 தொடக்கம் 30000 வரையிலான நியூரான்கள் அழிந்து விடுகின்றன என ஆய்வுகள் சொல்கின்றன.
அதனால் குழந்தைகளுக்கு தகவல் சேமிக்கும் சக்தி குறைகிறது.இதேவேளை குழந்தைகளுக்கு துரித உணவுகளை கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
சத்து நிறைந்த காய்கறிகளை கொண்டு சுவையான உணவுகளை செய்து தர வேண்டும். இயற்கையான உணவுகளே குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.