ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் 'இந்தியன் 2' படம் உருவாவது உறுதியாகியுள்ளது. படத்தை தில் ராஜு தயாரிக்கவுள்ளார்.
சில மாதங்களாகவே கமல் - ஷங்கர் இருவருமே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், 'இந்தியன் 2' உருவாக வாய்ப்புகள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இச்செய்தியை இருவருமே மறுக்கவில்லை.
இந்நிலையில் இக்கூட்டணி தற்போது உறுதியாகியுள்ளது. தமிழ் - தெலுங்கு என இருமொழிகளிலும் 'இந்தியன் 2' உருவாகவுள்ளது. தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு இப்படத்தை தயாரிக்கவுள்ளார்.
இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு, இன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது '2.0' இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வரும் ஷங்கர், அதனைத் தொடர்ந்து 'இந்தியன் 2' படத்தை இயக்கவுள்ளார்.
மேலும், கமல் அரசியலில் நுழையவிருப்பதால் 'இந்தியன் 2' படம் சரியானதாக இருக்கும் என்று சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.