அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் இருந்து பெலரஸ்சின் முன்னாள் முதல்தர வீராங்கனை விக்டோரியா அசரெங்கா விலகியுள்ளார்.
குடும்ப சூழ்நிலைகள் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் ஆண் பிள்ளையொன்றை பிரசவித்திருந்த விக்டோரியா அசரெங்கா, கடந்த ஜுன் மாதமே டென்னிஸ் போட்டிகளுக்கு மீண்டும் திரும்பியிருந்தார்.
இதன்பிரகாரம் எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் பிரதான சுற்றுக்கு ஜப்பானின் மிசா இகூச்சி உள்வாங்கப்பட்டுள்ளார்.
தமக்கு விரும்பமான அமெரிக்க டென்னிஸ் தொடரில் விளையாட முடியாமல் போயுள்ளமை குறித்து விக்டோரியா அசரெங்கா கவலையையும் வெளியிட்டுள்ளார்.
சின்சினாட்டி பகிரங்க டென்னிஸ் தொடரில் இருந்தும் இதே காரணங்களுக்காக விக்டோரியா அசரெங்கா இம்மாத ஆரம்பத்தில் விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.