தமிழகத்தில் பல கட்சிகளும் எம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுகிறார்கள். காரணம், அது இங்கே அவர்களுக்கான அரசியல் இருப்பிடத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு சக்கராயுதம்.
அதேசமயம், கேரளத்தில் எம்.ஜி.ஆர். வாழ்ந்த வீடு கவனிப்பார் இல்லாமல் சிதைந்து கொண்டிருக்கிறது. அதை இந்த நேரத்தில்கூட கொண்டு நோக்க ‘எம்.ஜி.ஆர். விசுவாசி’ ஒருவருக்குக்கூட நேரம் இல்லை.
குண்டும், குழியுமாய் கிடக்கும் வீட்டின் முகப்புத் திண்ணை. ‘நாங்கள் எப்போது வேண்டுமானாலும் விழுவோம்’ என மிரட்டும் இருபுறத்துச் சுவர்கள், வீட்டின் பின்புறம் ஒரு பாழும் கிணறு, அதுவும் இருக்குமிடம் தெரியாமல் செடி மண்டிக் கிடக்கிறது. வீட்டின் பின்புறச் சுவரும் சரியும் கண்டிஷன். வீட்டை ஒட்டியுள்ள கழிப்பிடத்தின் மீது மரம் விழுந்து ஓடுகள் சிதறிக்கிடக்கின்றன. கிட்டத்தட்ட பாழடைந்து கிடக்கிறது அந்த வீடு. எனினும் அது தொடர்பில் அவதானம் செலுத்த யாரும் இல்லை.