ரஜினி நடிக்கும் 'காலா' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் 60 நாட்கள் நடைபபெறவுள்ளது.
மும்பையில் தொடங்கப்பட்ட 'காலா' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு அமெரிக்கா சென்றார் ரஜினி.
தற்போது சென்னை திரும்பியுள்ள ரஜினி 'காலா' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
'காலா' படப்பிடிப்புக்காக சென்னையில் பிரம்மாண்டமாக அரங்குகள் கொண்ட தாராவி போன்ற செட் போடப்பட்டுள்ளது. இங்கு சுமார் 60 நாட்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. இதோடு ரஜினி சம்பந்தப்பட்ட மொத்த காட்சிகள் முடிவு பெறுகின்றன.
60 நாட்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டு ரஜினியின்றி மற்ற குழுவினரோடு மும்பையில் இறுதிகட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருக்கிறார் இரஞ்சித்.
ஈஸ்வரி ராவ், ஹியூமா குரேஷி, நானா படேகர், அஞ்சலி பட்டீல் சமுத்திரக்கனி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் ரஜினியோடு நடித்து வரும் இப்படத்தை தனுஷ் தயாரித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.