lan sinlan eng

இலங்கைக்கு எதிரான தொடரில் பங்கேற்காமை கவலையே

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

இலங்கைக்கு எதிரான தொடரில் தான் தெரிவு செய்யப்படாமை தொடர்பில் கவலை அடைவதாக தெரிவித்துள்ள கருண் நாயர் எனினும் தெரிவாளர்களின் தீர்மானத்தை மதிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர் “தெரிவாகாமை வருத்தம்தான் ஆனால் அணித் தெரிவாளர்களின் முடிவை மதிக்கிறேன். இப்படிப்பட்ட விடயங்கள் இப்படித்தான் செல்லும், இப்போது என் கவனம் முழுதும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஏ தொடரில்தான்.

இது ஒரு புது அனுபவமாக அமையும். இதுவரை தென்னாப்பிரிக்கா சென்றதில்லை. எனவே அந்தத் தொடருக்கு நன்றாகத் தயாரித்துக் கொண்டு அங்கு நன்றாகச் செயற்படுவதில்தான் இப்போது கவனம்.

முச்சதத்திற்குப் பிறகு என்னுடைய இன்னிங்ஸ்களை திரும்பிப் பார்க்கும் போது நன்றாகத் தொடங்கி பெரிய ஓட்டங்களுக்கு செல்லாமல் ஆட்டமிழந்திருந்தேன். ஆனால் துடுப்பாட்ட வீரர் ஒருவருக்கு இப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்படும். இப்போது அதைப்பற்றி பேசி பயனில்லை.

முச்சதம் அடித்த அந்த உற்சாக உணர்வை சற்றே இழந்து வருகிறேன், அதனால் அந்த காணொளியை 3 முறை பார்த்தேன். எனவே மீண்டும் ஒருமுறை அதைப்பார்க்க வேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.