lan sinlan eng

செய்தி

கருண் நாயரை ஏன் இலங்கைத் தொடரில் இணைக்கவில்லை

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

இந்திய அணி இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் முச்சத நாயகன் கருண் நாயரை இந்திய ஏ அணியின் தலைவராக்கி தென்னாபிரிக்காவுக்கு அனுப்புவது குறித்து இந்திய கிரிக்கெட் சபையில் கேள்வி எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக முச்சதம் பெற்றார் கருண் நாயர். ஆனால் அதன் பிறகு அவரது ஓட்ட எண்ணிக்கை 26, 0. 23, 5 என்று அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக சாதிக்க தவறினார்.

அவருக்குத் தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டிய நிலையில் தற்போது அவரை ஏ அணிக்குக் தலைவனாக அனுப்பியது குறித்து முன்னாள் அணித் தேர்வுக்குழு உறுப்பினரும், விக்கெட் காப்பாளருமான கிரண் மொரே கருத்து வெளியிட்டுள்ளார்.

“இலங்கை தொடருக்கு கருண் நாயர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது அர்த்தமல்ல. அவர் எப்போது வேண்டுமானாலும் டெஸ்ட் அணிக்கு திரும்ப அழைக்கப்படுவார். நான் இந்த ஐயத்தைப் புரிந்து கொள்கிறேன், தென்னாபிரிக்க ஏ தொடர் இந்திய, இலங்கை தொடர் சமயத்தில் வருகிறது.

ஆனால் இதற்காக தேர்வுக்குழுவினர் கருண் நாயரை புறக்கணிப்பதாக நினைப்பதில் பொருளில்லை. ஏ அணிக்கு தலைவனாக செயற்படுவது அவரது தன்னம்பிக்கையை உயர்த்தும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Face Book Setup 01

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி