lan sinlan eng

செய்தி

கோஹ்லியின் செயலை கண்டிக்கும் இணையவாசிகள்

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லிக்கும் பயிற்சியாளர் கும்ப்ளேவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது வெட்டவெளிச்சமானதை அடுத்து பயிற்சியாளர் பதவியில் இருந்து நாகரீகமாக விலகினார் கும்ப்ளே.

அவர் விலகியபோது கூட விராட் கோஹ்லி குறித்து எந்தவித தவறான கருத்தையும் கூறவில்லை

இந்த நிலையில் கடந்த ஆண்டு கும்ப்ளே பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டபோது அவரை வரவேற்று அவர் ட்விட்டரில் வெளியிட்டிருந்த  பதிவை கோஹ்லி நீக்கியுள்ளார்.   

ஏற்கனவே கும்ப்ளே விடயத்தில் விராட் கோஹ்லி நடந்து கொண்ட விதம் குறித்து கவாஸ்கர் உள்பட மூத்த கிரிக்கெட் வீரர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது ஒரு வருடத்திற்கு முன்பு போட்ட ட்வீட்டை தேடிப்பிடித்து அழித்தது அவரது அர்ப்பத்தனமான எண்ணத்தை வெளிப்படுத்துவதாக சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன.

Face Book Setup 01

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி