lan sinlan eng

செய்தி

தனுஷ் நடிக்கும் ஹொலிவுட் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

தனுஷ் நடிக்கும் “தி எக்ஸ்ட்ராஓர்டினரி ஜர்னி ஒப் பகிர்“ (The Extraordinary Journey Of The Fakir) என்ற ஹொலிவுட் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

'வேலையில்லா பட்டதாரி 2' மற்றும் 'வடசென்னை' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வந்தார் தனுஷ். இதில் 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 'வடசென்னை' படத்தின் 2ஆம் கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது.

இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து, ஹொலிவுட் படத்திற்கா 3 மாதங்கள் திகதிகள் ஒதுக்கினார் தனுஷ். இதன் படப்பிடிப்புக்காக வெளிநாட்டிற்கு பயணமானார்.

கனடா நாட்டைச் சேர்ந்த இயக்குநர் கென் ஸ்கொட் இயக்கத்தில் தி எக்ஸ்ட்ராஓர்டினரி ஜர்னி ஒப் பகிர் என்ற படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.

இதன் படப்பிடிப்பு பெல்ஜியம் நாட்டில் நடைபெற்று வருகிறது. பிரபல ப்ரெஞ்ச் நாவலான 'The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard' திரைப்படமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

பெரனீஸ் பெஜோ மற்றும் எரின் மொரியார்டி ஆகியோர் தனுஷுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள்.

ஹொலிவுட் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, 'வடசென்னை', 'மாரி 2', 'கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம்' மற்றும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார் தனுஷ்.

Face Book Setup 01

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி