lan sinlan eng

செய்தி

“அணியில் நிறைய ஸ்தீரமின்மையை ஏற்படுகின்றது“

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

ஆசியப் பயணங்களின் போது அவுஸ்திரேலிய அணித்தேர்வு முறையில் மாற்றம் செய்யப்படுவது அணியில் நிறைய ஸ்தீரமின்மையை ஏற்படுத்துவதாக, உஸ்மான் கவாஜா விமர்சனம் செய்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் நிறவெறிப்போக்குகளை சமீபத்தில் கட்டுரை ஒன்றில் தெரிவித்திருந்த உஸ்மான் கவாஜா மீண்டும் அணித்தேர்வு முறையையும் கேள்விக்குட்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான தொடரில் உஸ்மான் கவாஜா அணியில் இடம்பெறவில்லை. தொடர் முழுதும் குளிர்பானங்களை சுமந்து வந்த உஸ்மான் கவாஜா பங்களாதேஷுக்கு எதிரா போட்டிற்கு தெரிவு செய்யப்பட்டார். எனினு் இரண்டு இனிங்ஸ்களிலும் அவர் சிறப்பாக செயற்படாததால் சிட்டகாங் டெஸ்ட் போட்டியில் மீண்டும் நீக்கப்பட்டார்.

தற்போது ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக 3ஆம் நிலையில் கவாஜா களமிறக்கப்படுவார் என்பது ஓரளவுக்கு உறுதியான நிலையில் அவர் அணித்தேர்வு முறைகளை கேள்விக்குட்படுத்தியுள்ளார்.

“அவர்கள் இதற்கு முன்பு இப்படிச் செய்ததில்லை, இப்போது ஏன் செய்கிறார்கள் என்பது பற்றி எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. அணிக்கு உள்ளேயும் வெளியேயும் மாறி மாறி இருந்து அணியில் ஒரு உறுதியற்ற தன்மை உருவாகியுள்ளது.

வீரர்களை அச்சுறுத்தலில் வைத்திருப்பது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் வீரர்களை அணியிலிருந்து நீக்குவதும் எடுப்பதுமாக இருந்தால் இடம்பற்றிய அச்சத்துடன் விளையாட வேண்டியுள்ளது.

ஆனால் தற்போது ஆஷஸ் தொடரில் நன்கு திட்டமிட்டு உறுதியான அணியைக் களமிறக்கவிருக்கிறார்கள்” என உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார்.

Face Book Setup 01

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி