lan sinlan eng

செய்தி

தமிழ் திரையுலகில் அரசியல் தலையீடு

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

தமிழ் திரையுலகில் அரசியல் தலையீடு இருப்பதாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி, பரத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகவுள்ள படம் 'ஸ்பைடர்'.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தாகூர் மது தயாரித்து வரும் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

'ஸ்பைடர்' விளம்பரப்படுத்தும் செவ்வி ஒன்றில் “தமிழ் திரையுலகில் எந்தவொரு விடயத்தையும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. எந்த விவகாரத்தை கையில் எடுத்தாலும் பிரச்சினை செய்கிறார்கள். அரசியல் தலையீடு இருக்கிறது.

அதிகாரிகள் தலையீடு இருக்கிறது. இதையெல்லாம் தாண்டிப் படம் வந்தால் கேளிக்கை வரி, ஜிஎஸ்டி வரி என்று ஏகப்பட்டது இருக்கிறது. சினிமாத் துறையை எந்தவொரு தலையீடும் இல்லாமல் சுதந்திரமாக விடும்போது, இன்னும் நிறைய நல்ல படங்கள் வரும். சமூகத்தையே திருப்பிப் போடுகிற படங்கள், நமது நாட்டின் பிரச்சினைகளை சொல்கிற படங்கள், மக்களின் மனநிலைகளை சொல்கிற படங்கள் என நிறைய வரும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Face Book Setup 01

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி