lan sinlan eng

செய்தி

அனைத்து சாதனைகளையும் முறியடித்தது விவேகம்

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

தமிழகத்தின் சென்னையில் 'கபாலி', 'தெறி' படங்களின் முதல் நாள் வசூலை முறியடித்துள்ளது நேற்று முன்தினம் வெளியான 'விவேகம்'

சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் 'விவேகம்' பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நேற்று முன்தினம் வெளியானது.

பல்வேறு நிறுவன ஊழியர்களும் மொத்தமாக ஆசனங்களை பதிவு செய்ததால், முதல் நாள் நுழைவுச் சீட்டுக்கு சென்னையில் கடும் போட்டி நிலவியது.

இந்நிலையில், சென்னையில் முதல் நாள் வசூலாக 1.21 கோடி வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது 'விவேகம்'. சென்னையில் ரஜினி நடித்த 'கபாலி' முதல் நாளில் வசூல் செய்த 1.12 கோடியே சாதனையாக இருந்தது. அதனை முறியடித்துள்ளது 'விவேகம்'. விஜய் நடிப்பில் வெளியான 'தெறி' சென்னையில் முதல் நாள் வசூலாக 1.05 கோடி வசூலித்து தற்போது மூன்றாம் இடத்தில் இருக்கிறது.
காஜல் அகர்வால், விவேக் ஓபராய், கருணாகரன், அக்சரா ஹாசன் உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

Face Book Setup 01

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி