lan sinlan eng

இங்கிலாந்தை குறைத்து மதிப்பிட முடியாது – வில்லியர்ஸ்

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

சம்பியன்ஸ் கிண்ண தொடரில் கிண்ணத்தை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் அணிகளில் இங்கிலாந்துக்கும் இடமுண்டு எனவே குறைவாக எடைபோட வேண்டாம் என்று தென்னாப்பிரிக்க அணியின் அதிரடி வீரர் ஏ.பி.டி.வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

அந்த தொடருக்கு முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை தென்னாபிரிக்கா வெல்வது முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் “இங்கிலாந்துக்கு எதிராக தொடரை வெல்ல விரும்புகிறோம். தங்கள் நாட்டில் சிறந்த ஒருநாள் போட்டி வெற்றிகளை இங்கிலாந்து அணி பெற்று வருகிறது.

2015 உலகக் கிண்ண தோல்விகளுக்குப் பிறகே இங்கிலாந்து அணி மீண்டெழுந்து பெரிய சக்தியாக விளங்குகிறது. இந்த இங்கிலாந்து அணி திறமை வாய்ந்தது, தங்கள் அணி மீதான மரியாதையை அதிகரித்துள்ளனர்.

சம்பியன்ஸ் கிண்ணத்தை வெல்லும் அணிகளில் இங்கிலாந்தும் உள்ளது, எனவே குறைத்து எடைபோட முடியாது, இந்தியா கடந்த முறை வென்றது, அஸ்திரேலியாவும் இம்முறை கிண்ணத்தை வெல்ல போராடும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

Face Book Setup 01

 

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி