lan sinlan eng

தோனியை மதிக்க வேண்டும் – ரெய்னா

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

மஹேந்திர சிங் தோனி தலைமையில் பல போட்டிகளில் ஆடியுள்ள சுரேஷ் ரெய்னா, அவரை அவரை தலைமை பதவியிலிருந்து நீக்கியது பெரிய ஏமாற்றமளிப்பதாக தெரிவித்துள்ளார்.

“தோனி இந்திய அணியையும் ஐபிஎல் போட்டிகளிலும் நன்றாக தலைமை ஏற்று நடத்தியவர், அவரை மதிக்க வேண்டும். இதை நான் மட்டும் கூறவில்லை உலகமே அப்படித்தான் கூறுகிறது

அவருடன் ஓய்வறையை பகிர்ந்து கொண்டவன் என்ற முறையில் கடினமான காலக்கட்டங்களில் என்ன நடக்கும் என்று உங்களுக்கே தெரியும். அவரை ஒரு வீரராக மதிக்க வேண்டும். எந்தத் தொழிலாக இருந்தாலும் வீரர் அல்லது பத்திரிகையாளர் ஆகியோரை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அவர் முன்னால் களமிறங்க வேண்டும் நீண்ட நேரம் ஆட வேண்டும், அவர் உலகத்தரம் வாய்ந்த “பினிஷர்“ என்பது நினைவிருக்கட்டும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடிய அனுபவம் சிறப்பு வாய்ந்தது. நாங்கள் நிறைய கோப்பைகளை வென்றோம், ஐபிஎல் ஆக இருக்கட்டும் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடராகட்டும் நிறைய வெற்றிகளை குவித்தோம்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Face Book Setup 01

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி