lan sinlan eng

20 ஆண்டுகளை கடந்தது டென்னிஸ் புயல்

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளில் அமெரிக்க வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

1997ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் அவர் 17 வயது இளம் வீராங்கனையாக களமிறங்கினார்.

20ஆவது ஆண்டுகளாக அமெரிக்க ஓபனில் விளையாடி வரும் வீனஸ் வில்லியம்ஸ், கடந்த திங்களன்று மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்றார்.

அப்போது அவர் கூறும்போது, “நான் இங்கு 20 ஆண்டுகளாக டென்னிஸ் போட்டிகளில் விளையாடி வருகிறேன். இன்னும் எத்தனை ஆண்டுகள் இங்கு விளையாடுவேன் என்று தெரியாது. இந்த ஆண்டுகள் மகிழ்ச்சி நிறைந்தவை. நானும் என் சகோதரி செரீனாவும் இணைந்து பல பயணங்களை மேற்கொண்டு விளையாடியுள்ளோம்.

ஒருவருக்கு ஒருவர் பயிற்சியாளராக இருந்துள்ளோம். தற்போது செரீனா இல்லாமல் தனியாக விளையாடி வருகிறேன். செரீனா மீண்டும் விளையாட வரும் நாளுக்காக காத்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Face Book Setup 01

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி