lan sinlan eng

இந்திய அணி அவுஸ்திரேலிய பாணியில் ஆடுகிறது

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

இந்திய அணி இப்போது கிரிக்கெட்டை அவுஸ்திரேலிய பாணியில் ஆடுகிறது, இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் தலைவர் விராட் கோஹ்லிதான் என அவுஸ்திரேலியாவின் ‘மிஸ்டர் கிரிக்கெட்’ என அழைக்கப்படும் மைக் ஹஸி தெரிவித்துள்ளார்.

“கடினமான அவுஸ்திரேலிய கிரிக்கெட் பண்பாட்டை இந்திய அணியும் கடைபிடிக்கத் தொடங்கியுள்ளது. கோஹ்லி கோலி வெற்றிக்கான தீவிர கொண்டவர். கடந்த கால இந்திய அணியில் இத்தகைய தன்மைகளைப் பார்த்ததில்லை.

கடினமாக ஆடிய இந்திய அணி இதுவரை இல்லை என்று நான் கூறவரவில்லை. ஆனால் தற்போது சவாலுக்குக் களத்தில் குதிக்கத் தயாராக இருக்கின்றனர். இது கோஹ்லி அணியை வழிநடத்திய விதத்தினால் உருவானது. அவர் ஆவேசமாக ஆடுகிறார், இது அவுஸ்திரேலிய வழிதான்.

வரவிருக்கும் ஒருநாள் தொடரில் விராட் கோஹ்லி, ஸ்டீவ் ஸ்மித் இடையே கடும் போட்டி நிலவும் ஸ்மித் தனிப்பட்ட வீரர்களுக்கிடையேயான போட்டியை வரவேற்பவர், எனவே கோஹ்லியும் ஸ்மித்தும் ஒருவரையொருவர் விஞ்சி விடுவதற்காக ஆடுவார்கள்.

இருவருமே உறுதியான மனநிலை கொண்ட தலைவர்கள். எனவே ஒருவருக்கு எதிராக மற்றொருவர் நிச்சயம் கடும் சவால்களை அளிப்பார்கள்.

இரு அணிகளும் கடும் சவாலான மனநிலையில் ஆடுவதால் சிலபல வார்த்தை பரிமாற்றங்களைத் தவிர்க்க முடியாது, ஆனாலும் இது எல்லை மீறாமல் இருப்பது அவசியம்“ என மைக் ஹஸி கூறியுள்ளார். 

source; thehindu.tamil

Face Book Setup 01

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி