lan sinlan eng

இலங்கையில் டெஸ்ட் தொடரை வெல்ல முடிந்ததில்லை

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

“பழைய அணியில் மிகப்பெரிய பெயர்கள் அடிபட்டாலும் அவர்கள் ஆடிய இந்திய அணியினால் இலங்கையில் டெஸ்ட் தொடரை வெல்ல முடிந்ததில்லை. கோஹ்லி தலைமையிலான இந்த அணியே இதனைச் சாதித்துள்ளது“ என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

“இந்த இந்திய அணியில் வீரர்கள் ஒருவருடன் ஒருவர் 2 ஆண்டுகளாக ஆடிவருகின்றனர். இப்போது இவர்கள் அனுபவம் பெற்றவர்கள். இதற்கு முந்தைய இந்திய அணியும், மிகப்பெரிய தலைகளும், பெயர்களும் சாதிக்காததை இந்த இந்திய அணி கோஹ்லி தலைமையில் சாதித்துள்ளது. உதாரணமாக 2015இல் இலங்கையில் தொடரை வென்றது.

இந்திய அணியில் மிகப்பெரிய தலைகள், 20 ஆண்டுகள் ஆடிய மிகப்பெரிய பெயர்கள் இலங்கைக்கு பலமுறை வந்து ஆடியுள்ளனர். ஆனால் டெஸ்ட் தொடரை அவர்கள் இங்கு வென்றதில்லை. இந்த இந்திய அணி அதனைச் செய்துள்ளது.

மேலும் அயல்நாடுகளில் முந்தைய இந்திய அணிகள் செய்யாததை ஏற்கெனவே இந்த இந்திய அணி செய்யத் தொடங்கி விட்டது.

கோஹ்லி இன்னமும் இளைஞர்தான், முதல் டெஸ்ட் போட்டியில் நான் அவரை தலைவராக பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

உடல் மொழியில் முதிர்ச்சி தெரிகிறது. அவர் வயதுக்கு அவர் நிறையவே பங்களிப்ப்புச் செய்து விட்டார். மிகச்சிறந்த வீரராக உருமாறுவதற்கான அடையாளங்கள் அவரிடம் தெரிகிறது.“ எனக் குறிப்பிட்டுள்ளார் ரவி சாஸ்திரி.

Face Book Setup 01

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி