lan sinlan eng

நான்கு தபால் தலைகள் 4 கோடி

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

மகாத்மா காந்தி உருவப் படத்துடன் வெளியிடப்பட்ட அரிய 4 தபால் தலைகள் இங்கிலாந்தில் ஏலம் விடப்பட்டுள்ளன. அவற்றை 4 கோடியே 15 இலட்சம் (இந்திய ரூபாய்) கொடுத்து ஒருவர் வாங்கியுள்ளார்.

கடந்த 1948ஆம் ஆண்டு மகாத்மா காந்தி உருவப் படத்துடன் வெளியிடப்பட்ட 4 தபால் தலைகள் இங்கிலாந்தில் சமீபத்தில் ஏலம் விடப்பட்டன.

வழக்கமாக ஒற்றை தபால் தலையே ஏலத்துக்கு வந்துள்ளது. அரிய பொருட்கள் சேகரிப்பாளர்களிடமும் ஒற்றை தபால் தலைகளே உள்ளன. ஆனால், இந்த 4 தபால் தலைகளும் ஒன்றாக இணைந்த நிலையில் வரிசையாக உள்ளன.

இதுபோல் ஒன்றாக இருக்கும் 4 தபால் தலைகள் ஏலம் விடப்படுவது இதுவே முதல்முறை. எனவே, இந்த தபால் தலைகள் தனிசிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

காந்தியின் உருவப்படத்துடன், ‘சர்வீஸ்’ என்று ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டு  தலா 10 ரூபாய் மதிப்புள்ள இந்த 4 தபால் தலைகளையும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தபால்தலை சேகரிப்பாளர் ஒருவர், ஏலத்தில் வாங்கியுள்ளார்.

இந்திய தபால் தலைகள் அதிகபட்ச ஏலத்தொகைக்கு விற்கப்பட்டதும் இதுவே முதல்முறை என்று இங்கிலாந்தில் அரிய தபால் தலைகளை விற்கும் ‘ஸ்டான்லி கிப்ஸன்’ என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

Face Book Setup 01

 

Back to top
Go to bottom