lan sinlan eng

உணவும் பானமும்

நல்ல படத்தை யாராலும் தடுக்க முடியாது

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

நல்ல படத்தை யாராலும் தடுக்க முடியாது என்று 'விவேகம்' படத்திற்கான எதிர்மறை விமர்சனம் குறித்து சிவா தெரிவித்துள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் 'விவேகம்' பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஆகஸ்ட் 24ஆம் திகதி வெளியானது. இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன. மாறன் என்பவரது விமர்சனம், திரையுலகில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய விமர்சனத்துக்கு திரையுலகினர் பலரும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

இந்நிலையில் 'விவேகம்' படத்துக்கான எதிர்மறையான விமர்சனங்கள் குறித்து இயக்குநர் சிவா கூறியிருப்பதாவது

“எதிர்மறை விமர்சனங்களைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் பலரும் இப்படத்துக்கு நல்ல விமர்சனங்களைக் கொடுத்திருக்கிறார்கள். எங்களுடைய முயற்சிக்கு கிடைத்த பாராட்டால் நன்றி கடன்பட்டு இருக்கிறேன்.

தண்ணி அடிப்பது, தம் அடிப்பது, ஆபாசமாக ஒரு வசனம் எதுவுமின்றி ஒரு நேர்மையான திரைப்படம் என்று பலரும் தெரிவித்த கருத்தால் நெகிழ்ந்திருக்கிறேன். அஜித் சாரின் உறுதுணைக்கும், ரசிகர்களின் உறுதுணைக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்மறை விமர்சனங்களை நான் பார்ப்பதில்லை. நியாயமான விமர்சனங்களைப் பார்த்தேன். அதில் குறிப்பிட்டுள்ள ப்ளஸ் மற்றும் மைனஸ் அனைத்தையுமே குறிப்பு எடுத்து வைத்துள்ளேன். அவை அனைத்துமே ஒரு இயக்குநராக உதவியாக இருக்கும். காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலுள்ள விமர்சனங்களைப் பார்க்கவில்லை. விமர்சனம் என்பது படத்தைச் செய்யலாம், தனிமனித தாக்குதல் என்பது விமர்சனம் அல்ல. அப்படிப்பட்ட விமர்சனம் செய்பவர்கள் மீது எனக்கு எந்தவொரு விமர்சனமில்லை, வெறுக்கவுமில்லை.

விஜய் மில்டன் சார், லாரன்ஸ் சார், கவுரவ் சார் உள்ளிட்ட பலரும் சமூக வலைதளத்தில் பலரும் பொய்யாக விமர்சனம் செய்பவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். அவர்கள் அனைவருக்குமே என் நன்றி. நல்ல படத்தை யாராலும் தடுக்க முடியாது என்பது உண்மை. அதே சமயம் பலர் உண்மையாக ரொம்ப அழகாக விமர்சனம் செய்திருந்தார்கள். ஒரு படத்தை எப்படி விமர்சிக்க வேண்டுமே, அப்படி செய்திருந்தார்கள். அவர்கள் அனைவருக்குமே நன்றி. நிறைகளுக்கு நன்றி, குறைகளைத் திருத்திக் கொள்ள முயற்சி செய்கிறேன்.“ எனக் குறிப்பிட்டுள்ளார். 

Face Book Setup 01

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி