lan sinlan eng

சேர்ந்துவாழ விருப்பம் தெரிவித்த ரம்பா

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

நடிகை ரம்பா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர், தென்னிந்திய மொழிகளில் 100ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவருக்கும். கனடா தொழிலதிபரும் இலங்கைத் தமிழருமான இந்திரகுமாருக்கும் கடந்த 2010இல் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு லாவண்யா, சாஷா என 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கணவர் குடும்பத்தாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இடையில் இருவரும் பிரிந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்து திருமணச் சட்டத்திற்கு அமைய கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் மாதம் 2.5 இலட்சம் (இந்திய ரூபாய்) இடைக்கால நிவாரணம் தரக்கோரியும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ரம்பா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் ரம்பாவின் கணவர் இந்திரகுமார், ரம்பாவிடம் உள்ள தனது குழந்தைகளை மீட்டுத்தரக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நடிகை ரம்பா மற்றும் அவரது கணவர் இந்திரகுமாருக்கிடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையை சமரச தீர்வு மையம் மூலமாக பேசி தீர்த்துக்கொள்ள நீதிபதிகள் அறிவுறுத்தல் வழங்கியிருந்தனர்.  

இதனடிப்படையில் இருவரிடமும் சமரச தீர்வு மைய சட்டத்தரணிகள் மற்றும் இருதரப்பு சட்டத்தரணிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்றபோது நீதிபதிகள் முன்பாக ஒன்றாக முன்னிலையாகிய ரம்பாவும், அவரது கணவர் இந்திரகுமாரும், தாங்கள் மீண்டும் சேர்ந்து வாழ விரும்புவதாக தெரிவித்துள்ளனர். 

Face Book Setup 01

 

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி