lan sinlan eng

கொஸிப்

விவேகம் ரூபனின் கோபத்திற்கு காரணம் என்ன?

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

'விவேகம்' டீஸர் வெளியானமைக்கு காரணம் படத்தின் தொகுப்பாளர் (editor) ரூபனின் உதவியாளர்களே என வெளியான செய்திக்கு ரூபன் கடுமையாக சாடியுள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'விவேகம்'. விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விரைவில் மொத்த படப்பிடிப்பையும் முடித்து சென்னை திரும்ப படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த டீஸர் உத்தியோகபூர்லமாக வெளியாகும் முன்பே இணையத்தில் வெளியானது. எங்கிருந்து வெளியானது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வெளியாகின. அதில் ரூபனின் உதவியாளர்கள் மூலமாகத் தான் வெளியானது என்று செய்திகள் வெளியானது.

இச்செய்தியை குறித்து ரூபன், "என்னுடைய திரைப்படத்தில் பணியாற்றும் துணை இயக்குநர் யார் என்றாவது உங்களுக்குத் தெரியுமா? உங்களுடைய சுய விளம்பரத்துக்காக போலியான செய்திகளைப் பரப்ப வேண்டாம்.

எனது பெயரைக் களங்கப்படுத்தியதற்காக நான் உங்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியும். சமூக ஊடகங்கள் தவறானவற்றை பரப்ப எளிதான கருவியாகிவிட்டது. ஏதாவது பதிவு செய்வதற்கு முன் தயவுசெய்து சிறிதேனும் அறிவுபூர்வமாக சிந்தியுங்கள்" என தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக சாடியுள்ளார்.

 

Face Book Setup 01

Back to top
Go to bottom

பிரபலமான செய்தி